வேப்பூரில் கிராம சபை கூட்டம்


வேப்பூரில் கிராம சபை கூட்டம்
x

வேப்பூரில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தாலுகா வேப்பூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ரஞ்சித் குமார் முன்னிலை வகித்தார். ஆற்காடு ஊராட்சி ஒன்றிய பணி மேற்பார்வையாளர் கவுரி கலந்து கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார்.

கூட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்கள் போன்று புதிய குழுக்கள் உருவாக்குவது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் இரண்டு செயல்படுத்துவது. வடகிழக்கு பருவமழை எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story