450 பஞ்சாயத்துக்களில் கிராம சபை கூட்டம்


450 பஞ்சாயத்துக்களில் கிராம சபை கூட்டம்
x

மாவட்டத்தில் 450 பஞ்சாயத்துக்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்


மாவட்டத்தில் 450 பஞ்சாயத்துக்களில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் யூனியன்

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று 450 கிராம பஞ்சாயத்துக்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. விருதுநகர் யூனியன் கிராம பஞ்சாயத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் ஜெயசீலன் கலந்து கொண்டார்.

சாத்தூர் யூனியனுக்கு உட்பட்ட எம்.நாகலாபுரம், நென்மேனி, இருக்கன்குடி, கத்தாளம்பட்டி, மேட்டமலை, ஒ.மேட்டுப்பட்டி, ஒத்தையால், சங்கரநத்தம், சிறுக்குளம், பெத்துரெத்துபட்டி, பெரியஓடைப்பட்டி, சின்னஓடைப்பட்டி உள்பட 46 கிராம பஞ்சாயத்துகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தின் போது பொதுமக்கள் கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சி மன்ற தலைவர்கள் தெரிவித்தனர். சடையம்பட்டியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஸ்வரன் தலைமை தாங்கினார். இதில் அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆலங்குளம்

ஆலங்குளத்தில் ஊராட்சி மன்ற தலைவர் காத்தமை பசுபதிராஜ் தலைமையிலும், அப்பயநாயக்கர்பட்டியில் தலைவர் கணேஷ்குமார் தலைமையிலும், எம்.துரைச்சாமிபுரத்தில் தலைவர் ஜெயலட்சுமி தலைமையிலும், எட்டக்காபட்டியில் புஷ்பவள்ளி தலைமையிலும், ஏ.லட்சுமியாபுரத்தில் மகேஷ்வரி மகேஷ்வரன் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கல்லமநாயக்கர்பட்டியில் தலைவர் சாந்தா தலைமையிலும், கங்கர்செவல் பகுதியில் தலைவர் கலா தலைமையிலும், காக்கிவாடன்பட்டியில் தலைவர் அம்சவள்ளி தலைமையிலும், கீழாண்மறைநாடு பகுதியில் தலைவர் பொன்னுத்தாய் சீனிவாசன் தலைமையிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

குண்டாயிருப்பு பகுதியில் தலைவர் ஜெயலட்சுமி தலைமையிலும், கொங்கன்குளத்தில் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமையிலும், கரிசல்குளத்தில் தலைவர் கிருஷ்ணவேனி தலைமையிலும், நதிக்குடியில் தலைவர் பாகீரதி தலைமையிலும், முத்துச்சாமிபுரம் பகுதியில் தலைவர் நாகராஜ் தலைமையிலும், வலையபட்டியில் தலைவர் ராமலட்சுமி தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.


Next Story