430 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
430 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்ம் வருகிற 1-ந்தேதி(திங்கட்கிழமை) நடக்கிறது.
இதுகுறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கிராம சபை கூட்டம்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 430 கிராம ஊராட்சிகளிலும் தொழிலாளர் தினமான 1-ந் தேதி கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன. இந்த கூட்டத்தில் தொழிலாளர் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம், தணிக்கை அறிக்கை, கிராம ஊராட்சிகளில் சுத்தமான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டம், கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் தயாரித்தல், ஜல் ஜீவன் இயக்கம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்) மற்றும் இதர தலைப்புகளில் விவாதிக்கப்பட உள்ளது.
தீர்மானங்கள் நிறைவேற்றம்
கிராம ஊராட்சிகள் அனைத்து நிலைகளிலும் தன்னிறைவை பெறும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு நடவடிக்கைகள், திட்டப்பணிகள் தேர்வு, பயனாளிகள் தேர்வு குறித்து விவாதித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. எனவே இந்த கிராம சபை கூட்டத்தில் அனைத்து தரப்பு பொதுமக்களும் தவறாமல் கலந்துகொள்ளவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.