அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடந்தது.
தான்தோன்றி ஊராட்சி ஒன்றியம், மூக்கணாங்குறிச்சி கிராம ஊராட்சி தம்மநாயக்கன்பட்டியில் நேற்று குடியரசு தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் பார்வையாளராக கலந்து கொண்டார். கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம். தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), பிரதம மந்திரி குடியிருப்பு திட்டம்- ஊரகம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், மக்கள் திட்டமிடல் இயக்கம், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித்திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கிராம குடிநீர் வினியோக செயல்திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து கூட்டப் பொருளாக விவாதிக்கப்பட்டது. முன்னதாக அரசியலமைப்பு முகப்பு தொடர்பாக உறுதிமொழியினை அனைவரும் எடுத்துக்கொண்டனர். இதேபோல் கரூர் மாவட்டத்தில் உள்ள 157 கிராம ஊராட்சிகளிலும்் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. பின்னர் தாந்தோணிமலை காளியம்மன் கோவில் அன்னதான கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெற்ற சமத்துவ விருந்தில் பொதுமக்களுடன் அமர்ந்து கலெக்டர் உணவருந்தினர்.