குடியரசு தினத்தையொட்டி கிராம சபை கூட்டம்


குடியரசு தினத்தையொட்டி மதுரை மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

மதுரை


குடியரசு தினத்ைதயொட்டி மதுரை மாவட்டத்தில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

குடியரசு தினம்

தமிழகத்தில் நேற்று குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையடுத்து கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றது. அதன்படி சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யப்பநாயக்கன்பட்டியில் நடந்த கிராமசபை கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் பவுன்முருகன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பாக்கிய செல்வம் முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் திருச்செந்தில் அறிக்கை வாசித்தார். செக்கான்கோவில்பட்டி கிராமத்தலைவர் கலியுகநாதன் தலைமையிலும், ஒத்தவீட்டுபட்டி கிராமத்தில் செல்லம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் பிரேமா தலைமையிலும் கூட்டம் நடந்தது. இதில், ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி பாண்டி, துணை தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அதேபோல் அரசமரத்துப்பட்டி, சக்கரப்பநாயக்கனூர், தென்கரை, திருவாலவாயநல்லூர், சி.புதூர், இரும்பாடி, திருவேடகம், கீழமட்டையான் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கிராமசபை கூட்டம் நடந்தது.

கிராமசபை கூட்டம்

அலங்காநல்லூர் அருகே கல்லணை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் சேது சீனிவாசன் தலைமையிலும், அய்யூர் ஊராட்சியில் தலைவர் அபுதாகிர் தலைமையிலும், முடுவார்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி அசோகன் தலைமையிலும் கூட்டம் நடந்தது.

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சூரியகலா கலாநிதி, யூனியன் தலைவர் மணிமேகலை ராஜேந்திரன், துணை தலைவர் பாலாண்டி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரசாமி, வில்சன் ஆகியோர் மேற்பார்வையில் கிராம சபை கூட்டம் நடந்தது. காத கிணறு ஊராட்சியில் பஞ்சாயத்து தலைவர் செல்வி சேகர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது,

தீர்மானங்கள்

நரசிங்க ஊராட்சியில் தலைவர் ஆனந்த் தலைமையிலும், ஒத்தக்கடையில் ஊராட்சி தலைவர் முருகேஸ்வரி சரவணன் தலைமையிலும், யா.கொடிக்குளத்தில் ஊராட்சி தலைவர் திருப்பதி தலைமையிலும், கருப்பாயூரணியில் ஊராட்சி தலைவர் மகேஸ்வரி தலைமையிலும், திண்டியூர் ஊராட்சி தலைவர் லட்சுமி சந்திரசேகர் தலைமையிலும், ஆண்டார் கொட்டாரம் ஊராட்சி தலைவர் சீமான் தலைமையிலும் இசலானியில் பஞ்சாயத்து தலைவர் மீனாட்சி பூமிநாதன் தலைமையிலும் கூட்டம் நடந்தது.

அதேபோல் மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் மேற்கு யூனியன் தலைவர் வீரராகவன், துணை தலைவர் கார்த்திகேயன், வட்டார வளர்ச்சி அலுவலர் சோனா பாய், உலகநாதன் மேற்பார்வையில் சமயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. தேனூர் ஊராட்சியில் பாலு என்ற ஆதிமூலம் தலைமையிலும், தோடனேரியில் ஊராட்சி தலைவர் ஜெய்சங்கர் தலைமையிலும், கோவில் பாப்பாக்குடியில் ஊராட்சி தலைவர் சரவணன் தலைமையிலும், பொதும்பு ஊராட்சியில் தலைவர் சாந்தி தனசேகரன் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. இந்த கூட்டங்களில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story