மின்சாரம் பாய்ந்து மூதாட்டி சாவு


மின்சாரம் பாய்ந்து மூதாட்டி சாவு
x

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி சாவு

கன்னியாகுமரி

தக்கலை:

தக்கலை அருகே உள்ள வெட்டிக்கோணம் பகுதியை சேர்ந்தவர் வேலப்பன் பிள்ளை. இவருடைய மனைவி சரளாபாய் (வயது 84). இவர்களுக்கு 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். வேலப்பன் பிள்ளை இறந்துவிட்டதால், சரளாபாய் தனது மகன் முருகனுடன் (37) வசித்து வந்தார். நேற்று காலையில் சரளாபாய் வீட்டின் வெளிப்பகுதியில் வீட்டுக்கு மின்ஒயர் ெசல்ல அமைக்கப்பட்டு இருந்த இரும்பு கம்பியை பிடித்தார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சரளாபாய் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


Next Story