மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி படுகாயம்


மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி படுகாயம்
x

மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி படுகாயம் அடைந்தார்.

அரியலூர்

ஜெயங்கொண்டம் மலங்கண் குடியிருப்பு பகுதியை சேர்ந்த ராமசாமி மனைவி தங்கபாப்பு (வயது 65). இவர் மளிகை பொருட்களை வாங்கிக்கொண்டு திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஜெயங்கொண்டம் ஆண்டாள் தெருவை சேர்ந்த கதிர்வேல் (63) என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக மூதாட்டி மீது மோதியது. இதில், படுகாயம் அடைந்த மூதாட்டியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story