யாசகம் பெற்றதன் மூலம் கிடைத்த பணம்: ரூ.10 ஆயிரத்தை, இலங்கை தமிழர்களுக்காக வழங்கிய முதியவர்


யாசகம் பெற்றதன் மூலம் கிடைத்த பணம்:  ரூ.10 ஆயிரத்தை, இலங்கை தமிழர்களுக்காக வழங்கிய முதியவர்
x

யாசகம் பெற்றதன் மூலம் கிடைத்த பணம் ரூ.10 ஆயிரத்தை இலங்கை தமிழர்களுக்காக முதியவர் ஒருவர், தஞ்சையில் இருந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:-

யாசகம் பெற்றதன் மூலம் கிடைத்த பணம் ரூ.10 ஆயிரத்தை இலங்கை தமிழர்களுக்காக முதியவர் ஒருவர், தஞ்சையில் இருந்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.

யாசகம் பெறும் முதியவர்

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 72). யாசகம் பெறுபவரான(பிச்சை எடுப்பவர்) இவர், நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் அங்குள்ள வங்கி கிளை மூலம் ரூ.10 ஆயிரம் நிதியை இலங்கை தமிழர்களுக்காக முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் பூல்பாண்டி நிருபர்களிடம் கூறுகையில், "எனக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர். எனது மனைவி இறந்து விட்டார். மகள் மற்றும் மகன் திருமணம் ஆகி நல்ல நிலையில் உள்ளனர். மனைவி இறந்து விட்டால் கணவன் பிச்சைக்காரன் என்பதற்கு நான் ஒரு உதாரணம்.

நான் கடந்த 2010-ம் ஆண்டு முதல் யாசகம் பெற்று வருகிறேன். அதில் கிடைக்கும் பணத்தை கொண்டு பல்வேறு பள்ளிகளுக்கு குடிநீர் வசதி, எழுது பொருட்கள், மேஜை, நாற்காலி உள்ளிட்டவற்றை வாங்கி கொடுத்துள்ளேன்.

இலங்கை தமிழர்களுக்காக...

நான் இதுவரை 45-க்கும் மேற்பட்ட முறை பணம் வழங்கி உள்ளேன். இலங்கை தமிழர்களுக்கு, கொரோனா நிவாரண நிதி, பள்ளிகளுக்கு நிதி என இதற்கு முன்பு வரை ரூ.9 லட்சத்து 60 ஆயிரம் வரை வழங்கி உள்ளேன். இந்த நிதியை பல்வேறு மாவட்ட கலெக்டர்களிடமும், முதல்-அமைச்சரின் நிவாரண நிதிக்கும் வழங்கி உள்ளேன். தற்போது இலங்கை தமிழர்களுக்காக ரூ.10 ஆயிரம் நிதியை அனுப்பி வைத்துள்ளேன்.

எனது மகன் மற்றும் மகள்கள் நல்ல நிலையில் இருந்தாலும், பணத்தை எங்களிடம் தாருங்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் யாரும் யாசகம் பெற வேண்டாம் என்று கூறவில்லை. அதில் எனக்கு விருப்பம் இல்லாததால் நான் யாசகம் பெறும் பணத்தை பிறருக்கு உதவும் வகையில் வழங்கி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இலங்கை தமிழர்களுக்காக நிதி வழங்கிய முதியவரை அங்கிருந்த பொதுமக்கள் பாராட்டினர்.


Next Story