மானிய விலையில் புல் நறுக்கும் கருவி வழங்கும் நிகழ்ச்சி


மானிய விலையில் புல் நறுக்கும் கருவி வழங்கும் நிகழ்ச்சி
x

மானிய விலையில் புல் நறுக்கும் கருவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி கழனிவாசல் கால்நடை மருத்துவமனையில் தேசிய கால்நடை இயக்கம் சார்பில் பயனாளிகளுக்கு 75 சதவீத மானியத்தில் மின்சாரத்தினால் இயங்கும் புல் நறுக்கும் கருவி மற்றும் எந்திர புல் வெட்டும் கருவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவிற்கு கால்நடை மருத்துவர் கோகிலவாணி தலைமை தாங்கினார். சிவகங்கை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் நாகநாதன், காரைக்குடி கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாங்குடி, எம்.எல்.ஏ. பயனாளிகளுக்கு எந்திரங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சாக்கோட்டை ஒன்றிய மாவட்ட கவுன்சிலர் ராதாபாலசுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம், அரசு வக்கீல் பாலசுப்பிரமணியன் மற்றும் சங்கராபுரம் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.



Next Story