மாசாணியம்மன் கோவிலில் மயான கொள்ளை


மாசாணியம்மன் கோவிலில் மயான கொள்ளை
x
தினத்தந்தி 6 Feb 2023 12:15 AM IST (Updated: 6 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் மாசாணியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மயான கொள்ளை நடைபெற்றது. இதில் பூசாரியிடம் பக்தர்கள் சாட்டையடி வாங்கி வழிபட்டனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூரில் மாசாணியம்மன் கோவில் திருவிழாவையொட்டி மயான கொள்ளை நடைபெற்றது. இதில் பூசாரியிடம் பக்தர்கள் சாட்டையடி வாங்கி வழிபட்டனர்.

மாசாணியம்மன் கோவில்

ஓசூரில் சமத்துவபுரம் அருகே மாசாணியம்மன் கோவிலில் மயான பூஜை மற்றும் குண்டம் இறங்கும் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் இரவு மயான கொள்ளை நடந்தது. தொடர்ந்து களி மண்ணால் செய்யப்பட்ட மாசாணியம்மன் சிலைக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

அதன்பின்னர் பம்பை, உடுக்கை உள்ளிட்ட மேளதாளங்களுடன் குறி சொல்லி ஆடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, கோவில் பூசாரி, சுடுகாட்டு எலும்பை வாயில் கடித்தபடி அருள் வந்து ஆக்ரோஷமாக ஆடினார். மேலும், மண்ணால் செய்யப்பட்ட மாசாணியம்மன் சிலையை பூசாரி சுற்றி வந்து சூலாயுதத்தால் அம்மனின் மண் சிலையை குத்தி உடைத்தார்.

பக்தர்களுக்கு சாட்டையடி

பின்னர், சிலையின் மீது இருந்த எலுமிச்சை பழம், மஞ்சள் கயிறுகள், மண் உள்ளிட்ட பொருட்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டன. பேய், பிணி, பீடைகள், விலகவும் நோய்களில் இருந்து தங்களை காக்கவும் பக்தர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி வழிபட்டனர். இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story