மயான கொள்ளை திருவிழா
வாணாபுரத்தில் மயான கொள்ளை திருவிழா
கள்ளக்குறிச்சி
ரிஷிவந்தியம்
ரிஷிவந்தியம் ஒன்றியத்துக்குட்பட்ட வாணாபுரம் கிராமத்தில் உள்ள வீரபத்திரகாளி, வராகி அம்மன் கோவிலில் மயான கொள்ளை திருவிழா நடைபெற்றது. காலை 11 மணியளவில் மேளதாள இசையுடன் உற்சவர் வீரபத்திரகாளி அம்மன் ஊர்வலமாக புறப்பட்டு அருகில் உள்ள மயானத்தை வந்தைடைந்தார். தொடர்ந்து அங்கு மயான கொள்ளையிடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் வாணாபுரம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் மாலையில் மயானத்தில் இருந்து வீரபத்திரகாளி அம்மன் புறப்பட்ட ஊர்வலம் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது.
Related Tags :
Next Story