பச்சை தேங்காய் விலை உயர்ந்தது


பச்சை தேங்காய் விலை உயர்ந்தது
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிணத்துக்கடவு பகுதியில் பச்சை தேங்காய் விலை உயர்ந்தது. ஒரு டன் ரூ.23,500-க்கு விற்பனையானது.

கோயம்புத்தூர்

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு பகுதியில் பச்சை தேங்காய் விலை உயர்ந்தது. ஒரு டன் ரூ.23,500-க்கு விற்பனையானது.

தேங்காய்

கிணத்துக்கடவு பகுதியில் தென்னை விவசாயம் பிரதானமாக இருந்து வருகிறது. தென்னையில் இருந்து கிடைக்கும் இளநீர், தேங்காய், கொப்பரை தேங்காய், மட்டை மூலம் பல்வேறு தொழில்கள் நடைபெற்று வருகிறது.

கடந்த சில வாரங்களாக தேங்காய் விலை கடும் வீழ்ச்சியில் இருந்தது. பச்சை தேங்காய் ஒரு டன் ரூ.22 ஆயிரம், கொப்பரை தேங்காய் ஒரு டன் ரூ.74 ஆயிரத்துக்கு விற்பனையானது. ஆனால் நேற்று பச்சை தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் விலை அதிகரித்தது.

விலை நிர்ணயம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

தீபாவளியையொட்டி தேங்காய்க்கு கூடுதல் விலை கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். ஆனால் விலை அதிகரிக்கவில்லை. எனினும் நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று(நேற்று) பச்சை தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் விலை அதிகரித்துள்ளது. பச்சை தேங்காய் ஒரு டன் ரூ.23 ஆயிரத்து 500, கொப்பரை தேங்காய் ஒரு டன் ரூ.79 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்த விலையும் கட்டுப்படியாகாது. இன்னும் விலை அதிகரிக்க வேண்டும். இது தவிர ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதலை மீண்டும் தொடங்க வேண்டும். இதேபோன்று பச்சை தேங்காய்க்கு அரசு விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story