ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பசுமை தினம்


ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பசுமை தினம்
x

வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பசுமை தினம் கொண்டாடப்பட்டது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பசுமை தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். பள்ளியின் நிர்வாக இயக்குனர் ஷபானா பேகம் மற்றும் நிர்வாக முதல்வர் சத்தியகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பச்சை நிறத்தின் முக்கியத்துவம் மற்றும் அது நம் வாழ்வில் ஏற்படுத்தும் நேர்மறையான விளைவுகள் பற்றி குழந்தைகள் கற்றுக்கொள்ளும் விதமாக நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும் குழந்தைகளின் நடனம், வண்ண ஆடைகளில் அணி வகுப்பு போன்ற நிகழ்ச்சிகளும் பச்சை நிற ஆடைகளில் நடைபெற்றது. பச்சை நிறத்தின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் ரேஷ்மா மற்றும் ஹாஜிரா இராம் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story