25 பழங்குடியினருக்கு பசுமை குடில் வீடுகள்


25 பழங்குடியினருக்கு பசுமை குடில் வீடுகள்
x
தினத்தந்தி 27 Jan 2023 12:15 AM IST (Updated: 27 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

25 பழங்குடியினருக்கு பசுமை குடில் வீடுகள்

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொணவக்கரை, ஜக்கனாரை, கெங்கரை, தேனாடு, நடுஹட்டி, கோடநாடு, நெடுகுளா, குஞ்சப்பனை ஆகிய கிராம ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. கொணவக்கரை ஊராட்சி சார்பில் மேல்கூப்பு ஆதிவாசி கிராமத்தில் நடந்த கூட்டத்திற்கு தலைவர் ஜெயபிரியா தலைமை தாங்கினார். அப்போது தமிழக அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 25 பழங்குடியினருக்கு தலா ரூ.3 லட்சம் செலவில் கட்டப்பட்ட பசுமை குடில் வீடுகள் வழங்கப்பட்டது. இதில் கோத்தகிரி ஒன்றிய செயலாளர் நெல்லை கண்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோன்று ஜக்கனாரை ஊராட்சியில் தலைவர் சுமதி சுரேஷ், கெங்கரை ஊராட்சியில் தலைவர் முருகன், கோடநாடு ஊராட்சியில் தலைவர் சுப்பி காரி, தேனாடு ஊராட்சியில் தலைவர் ஆல்வின், குஞ்சப்பணை ஊராட்சியில் தலைவர் இம்மானுவேல் மணிகண்டன் ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. நடுஹட்டி ஊராட்சி கெட்டிகம்பை கிராமத்தில் தலைவர் அரக்கம்பை கிருஷ்ணன் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதில் சுற்றுலா துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.


Next Story