பசுமை முதன்மையாளர் விருது பெற்ற மாணவி


பசுமை முதன்மையாளர் விருது பெற்ற மாணவி
x

மாணவி பசுமை முதன்மையாளர் விருது பெற்றார்.

கரூர்

கரூர்,

கரூர் ராமேஸ்வரப்பட்டியை சேர்ந்தவர் கே.ஆர்.ரக்‌ஷனா (வயது 15). நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் கடந்த 10 ஆண்டுகளில் 80 ஆயிரம் மரக்கன்றுகளை வளர்த்து இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கியது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை சுமார் 8 ஆயிரம் கி.மீ தூரம் சாலை ஓரத்தில் 4 லட்சம் விதை பந்துகளை தூவியது. 1600 பேரை கண் தானத்தில் பதிவு செய்தது. 1200 கிராமங்களில் மரம் நட்டு வைத்தது. பூமி வெப்பமயமாதல் குறித்து தமிழ், ஆங்கிலம், இந்தி, ஜப்பானிஸ், சைனிஸ், ரஷ்யன், அரபி, ஜெர்மன், பிரான்ஸ் ஆகிய மொழிகளில் விழிப்புணர்வு பேசி சாதனை புத்தகத்தில் இடம்பெற்றது. உலகம் முழுவதும் விதைப்பந்து தூவ வேண்டி 24 மணிநேரம் விழிப்புணர்வு தியானம் செய்தது. மரத்தின் முக்கியத்துவம் குறித்து துண்டு பிரசுரங்களை 1 லட்சம் நபர்களுக்கு வழங்கியது என்பன உள்பட 16 சமூக பணிகளை செய்துள்ளார். இதில் பல சாதனைகள் இந்தியா புக் ஆப் ரெக்கார்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாணவி ரக்‌ஷனா தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வழங்கப்படும் பசுமை முதன்மையாளர் விருது தனிநபர் பிரிவிற்கு தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து 2021-ம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் பாராட்டு சான்றிதழும், ரூ.1 லட்சத்திற்கான காசோலையும் கலெக்டர் பிரபுசங்கர் மாணவி ரக்ஷனாவுக்கு வழங்கி பாராட்டினார். இதேபோல் புலியூர் ராணி மெய்யம்மை அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிக்கும், குளித்தலை சுபம் கல்வி அறக்கட்டளைக்கும் 2021-ம் ஆண்டிற்கான பசுமை முதன்மையாளர் விருதுக்கான பாராட்டுச் சான்றிதழும் மற்றும் காசோலையும் வழங்கப்பட்டது.


Next Story