பசுமை தீர்ப்பாய ஆய்வுக்குழு கூட்டம்
பசுமை தீர்ப்பாய ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது.
கரூர்
கரூர், நன்னியூர் மற்றும் நெரூர் காவிரி ஆற்று பகுதிகளில் செயல்பட்டு வரும் மணல் குவாரிகளில் தேசிய பசுமை தீர்ப்பாயம் சார்பில் ஆய்வுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சென்னை பசுமை தீர்ப்பாய ஆய்வுக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் கணபதி வெங்கட சுப்பிரமணியன் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு, எல்லமேடு பகுதியில் அமைந்துள்ள மணல் சேமிப்பு கிடங்கில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் திருச்சி கனிமம் மற்றும் கண்காணிப்பு செயற்பொறியாளர் முருகவேல், நீர்வளத்துறை மற்றும் மண்மங்கலம் வட்டாட்சியர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்று பசுமை தீர்ப்பாய ஆய்வுக் குழுவின் முன்பு ஆவணங்களை சமர்ப்பித்தனர்.
Related Tags :
Next Story