வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் முகாம்


வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் முகாம்
x

நெல்லையில் 14-ந்தேதி வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது

திருநெல்வேலி

நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகத்தில் மண்டல ஆணையாளர் விகாஸ்குமார் தலைமையில் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் அடுத்த மாதம் 14-ந் தேதி (திங்கட்கிழமை) நடக்க இருக்கிறது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்களின் குறைகள் ஏதேனும் நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்ய மனுமூலம், "மண்டல ஆணையாளர், வருங்கால வைப்புநிதி நிறுவனம், என்.ஜி.ஓ. பி காலனி, திருநெல்வேலி" என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும். மனுவின் மேல் "வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் முகாம்" மற்றும் மனுதாரரின் தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு அடுத்த மாதம் 7-ந் தேதிக்குள் அலுவலகத்திற்கு கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

மனு அனுப்பியவர்கள் 14-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை ஆணையாளரை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

இந்த தகவலை வருங்கால வைப்புநிதி உதவி ஆணையாளர் (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.


Next Story