முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர்வு முகாம்


முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர்வு முகாம்
x

வேலூரில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர்வு முகாம் நடைபெற்றது.

வேலூர்

வேலூர் காவலர் மன்றத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கான குறைதீர்வு மற்றும் மருத்துவ முகாம் நடந்தது. கமாண்டர் சலாப்குப்தா தலைமை தாங்கி, முன்னாள் ராணுவவீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். இந்த முகாமில் ஓய்வூதியம் தொடர்பாக குறைகளை களைதல் குறித்து விழிப்பணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதில், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சென்னை, காஞ்சீபுரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் ராணுவவீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை காட்பாடி ஒருங்கிணைந்த முன்னாள் ராணுவவீரர்கள் நலச்சங்கத்தினர் செய்திருந்தனர்.


Next Story