மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு முகாம்


மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு முகாம்
x

வேலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு முகாம் நடைபெற்றது.

வேலூர்

வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்வு முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் முன்னிலை வகித்தார்.

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த மாற்றுத்திறனாளிகள் பலர் தங்களது குறைகள் மற்றும் புகார்களை மனுக்களாக அளித்தனர். பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் உத்தரவிட்டார். மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து பெறப்பட்ட 47 மனுக்கள் குறித்து பரிசீலனை செய்து அரசின் திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறப்பட்டது.

முகாமில் 2 பேருக்கு மோட்டார் பொருத்திய தையல் எந்திரம், முதல்-அமைச்சர் விரிவான காப்பீடு திட்டத்தின் கீழ் 4 பேருக்கு நவீன செயற்கை கால்கள் என மொத்தம் ரூ.4 லட்சத்து 35 ஆயிரத்து 600 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.


Next Story