குறைதீர்க்கும் கூட்டம்


குறைதீர்க்கும் கூட்டம்
x
தினத்தந்தி 5 July 2022 1:57 AM IST (Updated: 5 July 2022 3:55 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம்

திருநெல்வேலி

நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவன அலுவலகத்தில் மண்டல உதவி ஆணையாளர் குமாரவேல் தலைமையில், வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் கூட்டம், வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. எனவே நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்களின் குறைகள் ஏதேனும் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல் இருப்பின், அவற்றை நிவர்த்தி செய்ய மனு மூலம் 'மண்டல ஆணையாளர், வருங்கால வைப்புநிதி நிறுவனம், என்.ஜி.ஓ. 'பி' காலனி, நெல்லை-7' என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.

மனுவின் மேலே 'வருங்கால வைப்புநிதி ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் முகாம்' மற்றும் மனுதாரர்களின் தொலைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு வருகிற 11-ந்தேதிக்குள் (திங்கட்கிழமை) நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவன அலுவலகத்துக்கு கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு மனு அனுப்பியவர்கள் வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவன மண்டல உதவி ஆணையாளரை நேரில் சந்தித்து தங்களது குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இந்த தகவலை நெல்லை தொழிலாளர் வருங்கால வைப்புநிதி நிறுவன மண்டல உதவி ஆணையாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.


Next Story