கோவில்பட்டியில்விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்


கோவில்பட்டியில்விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
x

கோவில்பட்டியில்விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் ஒரு திருமண மண்டபத்தில் கோவில்பட்டி கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தூத்துக்குடியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் நாச்சியார் அம்மாள், வேளாண்மை உதவி இயக்குனர்கள் மார்ட்டின் ராணி, நாகராஜ், கீதா, சின்னகண்ணு, உதவி கலெக்டர் அலுவலக தலைமை எழுத்தர் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம், ஓட்டபிடாரம் தாலுகாவை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஓ.ஏ.நாராயணசாமி, குருமலை ராஜன் குளத்தில் ெரயில்வே பணிக்காக சரள் மண் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுக்கப் படுவதாகவும், இதை கண்காணிக்க கோரியும், விளாத்திகுளம் மார்த்தாண்டம் பகுதியில் மணல் குவாரி அமைக்க தடை விதிக்க கோரியும், விவசாய காப்பீட்டுத் தொகையை வழங்க கோரியும் மனு கொடுத்தார்.

இதே போல கூட்டத்தில் மொத்தம் 55 மனுக்கள் கொடுத்தனர். மனுக்களை சம்பந்தப் பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப் படும் என்று உதவி கலெக்டர் மகாலட்சுமி பதில் அளித்தார்


Next Story