ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 11-ந்தேதி நடக்கிறது
பெரம்பலூர் மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 11-ந்தேதி நடக்கிறது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அடுத்த மாதம் (அக்டோபர்) 11-ந்தேதி காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. அரசு கூடுதல் செயலாளர் நிதித்துறை மற்றும் இயக்குனர்/ ஓய்வூதிய இயக்குனரகம் சென்னை தலைமையில், கலெக்டர் முன்னிலையில் நடைபெற உள்ள இந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்டத்தை சார்ந்த தமிழ்நாடு அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்று கரூவூலம் மூலம் ஓய்வூதியம் பெறும் ஓய்வூதியதாரர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் ஓய்வூதியர்கள் தங்களது ஓய்வூதியம் தொடர்பான கோரிக்கைகள் ஏதும் இருப்பின் அது குறித்த மனுக்களை 2 பிரதிகளில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வருகிற 28-ந்தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அளிக்கலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story