மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது
வெளிப்பாளையம்;
நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வங்கிக்கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 154 மனுக்கள் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். தொடர்ந்து பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது. சீர்காழி வட்டம் பள்ளிவாசல் தெரு புதுப்பட்டினம் கிராமத்தை சேர்ந்த முகமது யாசர் சவுதி அரேபியா நாட்டில் இறந்ததற்காக தமிழக அரசிடமிருந்து வரப்பெற்ற இழப்பீட்டுத்தொகை ரூ.30 லட்சத்துக்கான காசோலையை அவரது தந்தை அன்வர் அலியிடம் கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா, சமூக பாதுகாப்பு துணை கலெக்டர் ராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராமன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.