மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மளிகை கடைக்காரர் சாவு
சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த மளிகை கடைக்காரர் இறந்து போனார்.
தட்டார் மடம்:
சாத்தான்குளம் அருகே கடைக்கு பொருட்கள் வாங்க சென்றபோது, மோட்டார் ைசக்கிளில் இருந்து தவறி விழுந்த மளிகை கடைக்காரர் பரிதாபமாக இறந்து போனார்.
மளிகை கடைக்காரர்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள அப்புவிளை காரம்பாட்டை சேர்ந்த தங்கராஜ் மகன் அருண்பாண்டி (வயது 34). இவர் திசையன்விளையில் மளிகை கடை நடத்தி வந்தார். மேலும், அவரது மனைவி ஊரான சாத்தான்குளம் அருகே உள்ள புதுக்குளம் செக்கடிவிளையில் மனைவி மற்றும் 11 மாத குழந்தையுடன் வசித்து வந்தார். செவ்வாய்க்கிழமை இரவு அவர் ெசக்கடிவிளையில் இருந்து மோட்டார் ைசக்கிளில் கடைக்கு தேவையான பொருள்கள் வாங்குவதற்காக சாத்தான்குளத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
தவறி விழுந்து படுகாயம்
அங்குள்ள தனியார் பள்ளி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழுந்து ஓடியதில் நிலை தடுமாறி அவர் கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நெல்லை மருத்துவக் கல்லூரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
இது குறித்த புகாரின் பேரில் சாதான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், ஏட்டு ஜெயஸ்ரீ ஆகியோர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.