காட்பாடியில் முப்பெரும் விழாவில் 25 ஏழை எளிய 25 ஏழை, எளிய குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்
காட்பாடியில் முப்பெரும் விழாவில் 25 ஏழை எளிய 25 ஏழை, எளிய குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
காட்பாடியில் முப்பெரும் விழாவில் 25 ஏழை எளிய 25 ஏழை, எளிய குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன.
காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கம், டாக்டர் அ.மு.இக்ராம் சமூகநல அறக்கட்டளை, இந்திய மருத்துவ சங்க வேலூர் சி.எம்.சி. கிளை சார்பில் இப்தார் நோன்பு திறப்பு, மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்புவிழா என்று முப்பெரும் விழா காட்பாடியில் நடைபெற்றது. காட்பாடி ரெட்கிராஸ் அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். ரெட்கிராஸ் துணைத்தலைவர் டாக்டர் குமரன் ஆர்.சீனிவாசன் முன்னிலை வகித்தார். இந்திய மருத்துவ சங்க செயலாளர் டாக்டர் அ.மு.இக்ராம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக ஜெயின் சமூகத்தை சேர்ந்த ருக்ஜி ராஜேஷ்குமார்ஜெயின், கிறிஸ்தவ சமூகத்தை சேர்ந்த வேலூர் சி.எஸ்.ஐ. பேராயர் சர்மா நித்யானந்தம், இந்து சமூகத்தை சேர்ந்த விநாயகமூர்த்தி, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த தவுபீகுல் இஸ்லாம் உமரி, இர்பாஸ் ஆகியோர் கலந்து கொண்டு மத நல்லிணக்கம் குறித்து பேசினார்கள்.
விழாவில் சிறப்பு விருந்தினராக வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலக்குழு தலைவர் புஷ்பலதா வன்னியராஜா கலந்து கொண்டு இப்தார் நோன்பை திறந்து வைத்து பேசினார். பின்னர் அவர் 25 ஏழை, எளிய குடும்பத்தினருக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட 27 வகையான மளிகை பொருட்களை வழங்கினார்.
விழாவில் சங்க நிர்வாகிகள் விஜயகுமாரி, டாக்டர்கள் தீனபந்து, குமரகுரு, பழனி, சேந்தன், ஈப்பன், மயிலாம்பிகை குமரகுரு மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவை உதவும் உள்ளங்கள் சங்க நிர்வாகி கஸ்தூரிராமன் தொகுத்து வழங்கினார்.