300 ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள்
திருப்பத்தூரில் 300 ஏழை குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் நகராட்சி 6-வது வார்டு சார்பில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 300 குடும்பங்களுக்கு தலா ரூ.1,500 மதிப்புள்ள மளிகைப் பொருட்கள் இலவசமாக வழங்கும் நிகழ்ச்சி இஸ்மாயில் பேட்டை பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி கவுன்சிலர் சபீனா ரசாக் தலைமை வகித்தார். ரசாக் வரவேற்றார்.
300 ஏழை குடும்பங்களுக்கு ரூ4½ லட்சம் மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்களை தி.மு.க. நகர செயலாளர் எஸ். ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ் ஆகியோர் வழங்கி பேசினார்கள். நிகழ்ச்சியில் நகராட்சி கவுன்சிலர் சவுத் அகமத், சித்திக், ஹனிபா அல்லாஹ் பகத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story