கடலூரில் லாட்ஜில் மளிகைக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை கடன் தொல்லையால் விபரீத முடிவு


கடலூரில்  லாட்ஜில் மளிகைக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை  கடன் தொல்லையால் விபரீத முடிவு
x

கடன் தொல்லையால் கடலூர் லாட்ஜில் மளிகைக்கடைக்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

கடலூர்,

மளிகைக்கடைக்காரர்

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தென்னூர் வரதராஜன்பேட்டையை சேர்ந்தவர் பவுன்ராஜ். இவருடைய மகன் ஜெபஸ்டியன் (வயது 41). இவருக்கு திருமணமாகி மனைவி, 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர் அதே ஊரில் மளிகைக்கடை வைத்து நடத்தி வந்தார். இந்த மளிகைக்கடைக்கு அதிக கடன் வாங்கி பொருட்கள் வாங்கியதாக தெரிகிறது. ஆனால் அந்த கடனை அடைக்க முடியாமல் சிரமப்பட்டு வந்தார். இதனால் கடன் கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்க தொடங்கினர். இதனால் மனவேதனை அடைந்த ஜெபஸ்டியன் கடந்த 18-ந்தேதி ஆண்டிமடம் செல்வதாக கூறி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

தற்கொலை

அன்றே கடலூர் வந்த அவர் பஸ் நிலையம் அருகில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். ஆனால் அவரது அறைக்கதவு 2 நாட்களாக திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகமடைந்த லாட்ஜ் ஊழியர்கள் இன்று இது பற்றி கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து, வந்து, லாட்ஜில் உள்ள அறைக்கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது அங்கு ஜெபஸ்டியன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது பற்றி அவரது தந்தை பவுன்ராஜ் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story