உரிமம் இன்றி இயங்கிய மளிகை கடைக்கு 'சீல்'
உரிமம் இன்றி இயங்கிய மளிகை கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
வேலூர்
வேலூர் மாநகராட்சி 3-வது மண்டலத்துக்குட்பட்ட சலவன்பேட்டை கச்சேரி பள்ளி பகுதியில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. அதைத்தொடர்ந்து சுகாதார அலுவலர் பாலமுருகன் தலைமையில் அதிகாரிகள் அங்குள்ள கடைகளில் சோதனை செய்தனர். அப்போது ஒரு மளிகை கடையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்து 12 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அந்த மளிகை கடை உரிமம் இல்லாமல் இயங்கியதும் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. பின்னர் அந்த கடையை அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர். இதுபோன்று உரிமம் பெறாமல் கடைகளை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.
Related Tags :
Next Story