மளிகைக்கடை உரிமையாளர் தற்கொலை


மளிகைக்கடை உரிமையாளர் தற்கொலை
x

மளிகைக்கடை உரிமையாளர் தற்கொலை செய்துகொண்டாா்.

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் வரகப்பாவீதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 51). மளிகைக்கடை உரிமையாளர். இவருடைய மனைவி நித்யா (44). இவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் பகலில் கடையில் இருந்து வீட்டுக்கு வந்த பிரபாகரன் மொட்டை மாடிக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் கீழே இறங்கி வரவில்லை. இதனால் நித்யா மாடிக்கு சென்று பார்த்தபோது பிரபாகரன் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் நித்யா மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டா்கள் ஏற்கனவே பிரபாகரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பிரபாகரன் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும், அவரது வீட்டில் தற்கொலை செய்வதற்கு முன்பு பிரபாகரன் எழுதி வைத்த கடிதம் ஒன்று சிக்கியது. அதையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில், பிரபாகரன் கடன் பிரச்சினையால் இறந்து இருக்கலாம் என்று தெரியவந்தது. பிரபாகரனின் உடல் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையொட்டி ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Related Tags :
Next Story