மினி லாரி மோதி மளிகைக்கடை உரிமையாளர் பலி
சங்கராபுரத்தில் மினி லாரி மோதி மளிகைக்கடை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்
சங்கராபுரம்
மினிலாரி மோதல்
சங்கராபுரம் அருகே உள்ள செம்பராம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நாவன் மகன் அண்ணாமலை(வயது 34). அதேஊரில் மளிகைக்கடை நடத்தி வந்த இவர் நேற்று முன் தினம் இரவு மோட்டார் சைக்கிளில் சங்கராபுரம் பூட்டை சாலையில் உள்ள செல்போன் கடைக்கு சென்றார். பின்னர் அவர் கடை முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்துவிட்டு, மீண்டும் மோட்டார் சைக்கிளை எடுக்க வந்தார். அப்போது அவ்வழியாக வந்த மினிலாரி அண்ணாமலை மீது மோதியது.
போலீசார் விசாரணை
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சங்கராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், அண்ணாமலை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸ் சிறப்பு- இன்ஸ்பெக்டர் சந்தியாகு வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.