விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை


விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை
x
தினத்தந்தி 3 Feb 2023 12:30 AM IST (Updated: 3 Feb 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

கண்டமனூரில் விஷம் குடித்து புதுமாப்பிள்ளை தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

கண்டமனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவருடைய மகன் காளிதாஸ் (வயது 33). கடந்த 4 மாதங்களுக்கு முன்பு காளிதாசுக்கும், தேவாரம் அருகே கோணாம்பட்டியை சேர்ந்த பிரபா என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த பின்பு காளிதாஸ் எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரபா கடந்த மாதம் கணவருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறி அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த காளிதாஸ் கடந்த மாதம் 9-ந்தேதி கண்டமனூர் அருகே உள்ள அவரது தோட்டத்தில் வைத்து விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி காளிதாஸ் உயிரிழந்தார். இதுதொடர்பாக கண்டமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story