அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா


அரசு பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பூபாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழப்பாவூர் யூனியன் பூபாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பழுதடைந்த வகுப்பறை கட்டிடம் இடித்து அகற்றப்பட்டது. தொடர்ந்து அங்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சத்தில் புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, புதிய வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் அ.தி.மு.க. ஓ.பன்னீர்செல்வம் அணி மாவட்ட செயலாளர் கணபதி, பொதுக்குழு உறுப்பினர் ராதா, பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து தலைவர் ஜெயராணி கலைச்செல்வன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story