ரூ.20 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா


ரூ.20 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
x

கடையம் அருகே ரூ.20 லட்சத்தில் புதிய சமுதாய நலக்கூடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

தென்காசி

கடையம்:

கடையம் அருகே நரையப்பபுரத்தில் ஆலங்குளம் சட்டமன்ற மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யபட்டது. நிகழ்ச்சிக்கு ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் தலைமை தாங்கி சமுதாய நலக்கூடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இதில் ஒன்றிய கவுன்சிலர் புளி கணேசன், மாவட்ட செயலாளர் கணபதி, பொதுக்குழு உறுப்பினர் ராதா, மண்டல செயலாளர் சேர்மத்துரை, ஒன்றிய செயலாளர்கள் ராஜவேல், இளங்கோ, மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி விஜய், வினோத், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு லட்சு, கிளை செயலாளர்கள் துரைசிங்கம், முருகன், ஊர் நாட்டாமைகள் நாராயண பெருமாள், மதியழகன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story