நிலக்கடலை ரூ.7 லட்சத்துக்கு ஏலம்


நிலக்கடலை ரூ.7 லட்சத்துக்கு ஏலம்
x

நிலக்கடலை ரூ.7 லட்சத்துக்கு ஏலம் போனது.

கரூர்

நொய்யல்,

நொய்யல் அருகே சாலைப்புதூர் அரசு ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் நிலக்கடலை ஏலம் நடைபெறுகிறது. இதில் அருகில் உள்ள கரூர் ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு வேளாண் பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில்113.10 குவிண்டால் எடை கொண்ட 346 மூட்டை நிலக்கடலை விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.71.40-க்கும், குறைந்த விலையாக ரூ.60.31-க்கும், சராசரி விலையாக ரூ.66.70-க்கும் என்று ரூ.7லட்சத்து 58 ஆயிரத்து 37க்கு விற்பனை ஆனது.


Related Tags :
Next Story