நிலத்தடி நீர் மேம்பாடு பயிற்சி முகாம்
சங்கரன்கோவிலில் நிலத்தடி நீர் மேம்பாடு பயிற்சி முகாம் நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் நிலத்தடி நீர் மேம்பாடு மற்றும் மேலாண்மை குறித்த பயிற்சி முகாம் நடந்தது. தனுஷ்குமார் எம்.பி. முகாமை தொடங்கி வைத்தார். தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். முகாமில் தென்காசி மாவட்டம் நிலத்தடி நீர் சூழல்கள் பற்றிய பயிற்சியும், நிலத்தடி நீர் வளங்கள், மழைநீர் சேகரிப்பு மற்றும் செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டல் பற்றிய வழிமுறைகளும், நிலத்தடி நீர் தரம் பற்றியும் விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.
மத்திய நிலத்தடி நீர் வாரியம் சார்பாக மூத்த விஞ்ஞானிகள் ராஜ்குமார் டாக்டர் சக்திமுருகன், சிவராமகிருஷ்ணன், பத்மாவதி மற்றும் பரமசிவம் ஆகியோர் பயிற்சி அளித்தனர். ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ஹாசன் இப்ராகிம், மாவட்ட நிர்வாகம் சார்பாக பொதுமக்களுக்கு நிலத்தடி நீர் விழிப்புணர்வு குறித்த பயிற்சியை வழங்கினார். பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி சரவணன், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரா மற்றும் விவசாயிகள், அரசு பள்ளி மாணவ- மாணவிகள், சங்கரன்கோவில் அரசு கலைக்கல்லூரி மாணவ- மாணவிகள், மனோ கல்லூரி மாணவ- மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.