2,121 பேர் குரூப்-1 தேர்வை எழுதினர்


2,121 பேர் குரூப்-1 தேர்வை எழுதினர்
x

திருவாரூர் மாவட்டத்தில் 2,121 பேர் குரூப்-1 தேர்வை எழுதினர். 1,385 பேர் தேர்வு எழுத வரவில்லை

திருவாரூர்

திருவாரூர்;

திருவாரூர் மாவட்டத்தில் 2,121 பேர் குரூப்-1 தேர்வை எழுதினர். 1,385 பேர் தேர்வு எழுத வரவில்லை

குரூப்-1 தேர்வு

திருவாரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வு 5 தேர்வு மையத்தில் நேற்று நடந்தது. திருவாரூரில் திரு.வி.க. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேலுடையார் மேல்நிலைப்பள்ளி, வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜி.ஆர்.எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 தேர்வு மையங்களில் காலை 9.30 மணிமுதல் பகல் 12.30 மணி குரூப்-1 தேர்வு நடைபெற்றது.

வரவில்லை

இத்தேர்வை எழுத 3,506 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 2,121 தேர்வர்கள் தேர்வு எழுதினர். 1,385 தேர்வு எழுத வரவில்லை. இத்தேர்வு பணிக்கு 12 முதன்மை தேர்வு கண்காணிப்பாளர்களும், 3 நடமாடும் கண்காணிப்பு குழுக்களும், 1 பறக்கும்படை குழுவும், 12 கண்காணிப்பு அலுவலர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு மையத்தில் தேவையான குடிநீர், கழிவறை மற்றும் மின்சார வசதி செய்யப்பட்டிருந்தது. அனைத்து தேர்வு மையங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story