விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 20-ந் தேதி தொடங்குகிறது


விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில்    குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு    20-ந் தேதி தொடங்குகிறது
x
தினத்தந்தி 17 Nov 2022 12:15 AM IST (Updated: 17 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு 20-ந் தேதி தொடங்குகிறது.

விழுப்புரம்


டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 முதன்மை தேர்வு அடுத்த ஆண்டு (2023) பிப்ரவரி மாதம் 28-ந் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதனை தொடர்ந்து குரூப்-2 முதன்மை தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 20-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தொடங்கி நடைபெற உள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ள நபர்கள் https://forms.gle/H754f2h6JnTnefHJ7 இந்த கூகுள் பார்ம் லிங்கை பயன்படுத்தி தங்களது பெயரை முன்பதிவு செய்துகொள்ளலாம். மேலும் 20-ந் தேதி முதல் தொடங்கும் இலவச பயிற்சி வகுப்பிற்கு வரும் தேர்வர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1 மற்றும் ஹால் டிக்கெட் ஜெராக்ஸ்-1 உடன் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகி இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.


Next Story