வாலிபரை தாக்கிய காவலாளி கைது


வாலிபரை தாக்கிய காவலாளி கைது
x

வாலிபரை தாக்கிய காவலாளி கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

பாளையங்கோட்டை சீவலப்பேரி பெரிய வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சண்முகம் என்ற சதீஷ் (வயது 23). இவரும், மறுகால்தலை மேல தெருவைச் சேர்ந்த ரமேஷ் (47) என்பவரும் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காலி இடத்தில் காவலாளியாக வேலை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று அந்த இடத்தில் உள்ள முள் மரத்தை வெளியே இருந்து வெட்டுவதற்காக சிலர் வந்தனர்.

அப்போது அந்த மரத்தை வெட்டக்கூடாது என்று ரமேஷ் திருப்பி அனுப்பினார். முள் மரத்தை வெட்டுவதற்கு சண்முகம்தான் ஆட்களை அனுப்பி வைத்திருப்பதாக ரமேஷ் கருதினார். இந்த நிலையில் சீவலப்பேரி பெட்ரோல் பங்க் அருகே சண்முகம் வந்தபோது, அவரை ரமேஷ் வழிமறித்து அவதூறாக பேசி கையால் அடித்து மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில், சீவலப்பேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து ரமேஷை கைது செய்தார்.


Next Story