அழகியபாண்டியபுரம் அருகே விஷம் குடித்து காவலாளி தற்கொலை


அழகியபாண்டியபுரம் அருகே விஷம் குடித்து காவலாளி தற்கொலை
x
தினத்தந்தி 23 May 2023 12:45 AM IST (Updated: 23 May 2023 12:46 AM IST)
t-max-icont-min-icon

அழகியபாண்டியபுரம் அருகே விஷம் குடித்து காவலாளி தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

அழகியபாண்டியபுரம் அருகே கேசவன்புதூர் வடக்குதெரு பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 75). இவருக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். முருகன் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காவலாளியாக வேலை பார்த்தார்.

நோயினால் அவர் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. சம்பவத்தன்று முருகன் வீட்டில் இருந்த போது விஷம் குடித்து நுரை தள்ளிய நிலையில் கிடந்தார்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர், முருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். மேலும் இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story