காவலாளி தற்கொலை


காவலாளி தற்கொலை
x

காவலாளி தற்கொலை செய்து கொண்டனர்.

அரியலூர்

விக்கிரமங்கலம்:

அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள மழவராயநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் முனியப்பன்(வயது 37). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் மழவராயநல்லூரில் உள்ள தனது வீட்டிற்கு வந்த முனியப்பனிடம், அவரது மனைவி தமிழரசி சம்பள பணம் குறித்து கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழரசியை திட்டி தாக்கிவிட்டு விக்கிரமங்கலம் வந்த முனியப்பன், அங்கு விவசாய நிலத்திற்கு பயன்படுத்தப்படும் களைக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து முனியப்பனை அவரது நண்பர் வல்லரசு உள்ளிட்டோர் விக்கிரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்ததாக தெரிகிறது. இது பற்றி தகவல் அறிந்து அங்கு சென்ற தமிழரசி மற்றும் உறவினர்கள், முனியப்பனை அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசில் தமிழரசி கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story