கூடலூர் கிரிக்கெட் அணி வெற்றி
கூடலூர் கிரிக்கெட் அணி வெற்றி
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கோத்தகிரி காந்தி மைதானத்தில் மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற பி டிவிஷன் லீக் போட்டியில் ஊட்டி நியூ ஸ்டார் கிரிக்கெட் அணி மற்றும் கூடலூர் கிரிக்கெட் அணி பங்கேற்று விளையாடியது. இதில் டாசை வென்று முதலில் பேட்டிங் செய்த கூடலூர் கிரிக்கெட் அணி நிர்ணயிக்கப்பட்ட 30 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 249 ரன்கள் குவித்தது. இந்த அணியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய முரளி 5 சிக்சர்கள் மற்றும் 15 பவுண்டரிகளுடன் 147 ரன்களை குவித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்.
இதைத்தொடர்ந்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஊட்டி நியூ ஸ்டார் கிரிக்கெட் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 148 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. இந்த அணி வீரர் நவாஸ் அதிகபட்சமாக 25 ரன்கள் எடுத்தார். கூடலூர் அணியின் பந்து வீச்சாளர் முரளி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 147 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய கூடலூர் அணி வீரர் முரளி சிறந்த ஆட்டக்காரராக தேர்வு செய்யப்பட்டார்.