உயர் கல்விக்கு வழிகாட்டுதல் முகாம்


உயர் கல்விக்கு வழிகாட்டுதல் முகாம்
x

உயர் கல்விக்கு வழிகாட்டுதல் முகாம் விருதுநகரில் நாளை நடக்கிறது

விருதுநகர்


விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்க கூட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ-மாணவிகளுக்கு உயர் கல்விக்கான வழிகாட்டுதல் முகாம் மற்றும் கல்வியாண்டில் பிளஸ்-2 முடித்த உயர் கல்வியில் சேரும் மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. அதன் ஒரு பகுதியாக மாவட்டத்தில் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்று இதுவரை கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்காத மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கும் வகையில் பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து நடத்தும் உயர்கல்வி வழிகாட்டுதல் முகாம் மற்றும் கடந்த கல்வியாண்டில் பிளஸ்-2 முடித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நாளை (சனிக்கிழமை) அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கில் நடைபெற உள்ளது. முகாமில் தனியார் கல்லூரிகளும் கலந்துகொண்டு மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் குறித்து எடுத்துரைப்பார்கள். எனவே மாணவர்கள் தங்கள் உயர் கல்விக்கு தேவையான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் பெறுவதற்கு இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Related Tags :
Next Story