அய்யப்பன் கோவிலில் குண்டம் திருவிழா
அய்யப்பன் கோவிலில் குண்டம் திருவிழா நடைபெற்றது.
ஊட்டி,
ஊட்டி அருகே எல்லநள்ளி பகுதியில் அய்யப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. அதேபோல் நடப்பாண்டில் கடந்த 16-ந் தேதி கொடியேற்றத்துடன் 30-ம் ஆண்டு திருவிழா தொடங்கியது. தொடர்ந்து தினமம் அய்யப்பன், மஞ்சமாதா சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அய்யப்பன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். தேரை அய்யப்ப பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து செண்டை மேளம் முழங்க தேர் முக்கிய வீதிகளில் வலம் வந்தது. இதைதொடர்ந்து 9-ம் ஆண்டு குண்டம் திருவிழா நடைபெற்றது. இதற்காக குண்டம் திறக்கப்பட்டு இருந்தது. இதில் அய்யப்ப பக்தர்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என பலர் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான கோவில் நிர்வாகிகள் ராஜேந்திரன், யோகேஷ், கார்த்தி, மணிகண்டன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.