கேட்பாரற்று கிடந்த 3 நாட்டுத்துப்பாக்கிகள் மீட்பு
ஓசூர் அருகே கேட்பாரற்று கிடந்த 3 நாட்டுத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.
கிருஷ்ணகிரி
ஓசூர்:
பேரிகை அருகே திம்மசந்திரம் பக்கமுள்ள மாட்டுண்ணி வனப்பகுதியில் வனக்காப்பாளர் செல்வராஜ் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அங்கு 2 நாட்டுத்துப்பாக்கிகள் கேட்பாரற்று கிடந்தன. இதை வனத்துறையினர் மீட்டு பேரிகை போலீசிடம் ஒப்படைத்தனர். இது குறித்து பேரிகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் பீமாண்டப்பள்ளி வனக்காப்பாளர் சிவக்குமார் மற்றும் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் கேட்பாரற்று நாட்டுத்துப்பாக்கி ஒன்று கிடந்தது. இதை வனத்துறையினர் மீட்டு சூளகிரி போலீசில் ஒப்படைத்தனர். இந்த துப்பாக்கியை வீசி சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story