ஏலகிரி மலையில் குரு ஜெயந்தி விழா


ஏலகிரி மலையில் குரு ஜெயந்தி விழா
x

ஏலகிரி மலையில் குரு ஜெயந்தி விழாவில் பெண்கள் 108 பால் குடங்களுடன் ஊர்வலமாக சென்று சிறப்பு பூஜை செய்தனர்.

திருப்பத்தூர்

ஏலகிரி மலையில் உள்ள ஸ்ரீஸத்ய ஆஷ்ரமத்தில் வருடந்தோறும் உலக குரு மார்களின் புனித தினமாகவும், உலக குருமார்களை நினைவு கூறும் புனித நாளாகவும் கொண்டாடும் ஸ்ரீஸத்ய குரு ஜெயந்தி தரிசன திருவிழா சத்ய வழி பக்தர்களால் கொண்டாடப்பட்டது. இதைமுன்னிட்டு பலவிதமான நிகழ்ச்சிகளும், பூஜைகளும் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு முதல் நாள் ஏலகிரிமலையில் அருள் பாலித்து வரும் ஸ்ரீமஹாசக்தி ராமேஸ்வரம் சென்று புனித நீராடும் சேது புண்ய ஸ்னான யாத்ரா நிகழ்ச்சிக்கு பல மாநிலங்களில் இருந்தும் திரளான ஸத்ய பக்தர்கள் பஸ்களில் புனித யாத்திரை புறப்பட்டு சென்றனர். பொன்னேரி கூட்ரோடில் இருந்து ஏலகிரி மலைக்கு நூற்று கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாக பால் குடம் ஏந்தி ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். மேலும் 108 தட்டுக்களில் குரு சீரை பக்தர்கள் 25 கிலோமீட்டர் தூரம் சுமந்து வந்து சமர்ப்பணம் செய்தார்கள். கூடவே அலங்கார வாகனத்தில் கேரள செண்டை மேள வாத்தியங்கள் முழங்க பொன்னேரியிலிருந்து ஆஷ்ரம் பக்தர்கள் பாத யாத்திரையாக நடந்து சென்றனர்.

சத்ய ஜெயந்தி பக்தர்கள் கைகளாலேயே 27 பானைகளில் பொங்கல் வைத்தனர். பின்னர் 12 வகையான உணவுகள் அடங்கிய அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள் தங்கள் கைகளால் ஆகாயத்தில் தீபம் ஏற்றி பறக்க விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை பார்த்தசாரதியின் சொற்பொழிவு நடைபெற்றது.

இவ்விழாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீஸத்ய ஆஷ்ரம் சத்ய வழி பக்தர்கள் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story