பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருபூஜை விழா


பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருபூஜை விழா
x

பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருபூஜை விழா நடந்தது.

பெரம்பலூர்

பெரம்பலூர்:

பெரம்பலூர் நகரில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் குருபூஜை விழா தர்ம பரிபாலன சங்கம் சார்பில் நேற்று நடந்தது. இதனை முன்னிட்டு நாயன்மார்கள் சன்னதியில் அமைந்துள்ள சேக்கிழார் பெருமான் சிலைக்கும், திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் சிலைகளுக்கும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை நடந்தது. அபிஷேக, ஆராதனைகளை கோவில் அர்ச்சகர் கவுரிசங்கர் சிவாச்சாரியார் நடத்தினார். இதில் தர்மபரிபாலன சங்க நிர்வாகிகள், முன்னாள் அறங்காவலர்கள், தினசரி வழிபாட்டு குழுவினர், பிரதோஷ வழிபாட்டு குழுவினர் மற்றும் சிவனடியார்கள், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story