அவினாசிலிங்கேசுவரர் கோவிலில் மாணிக்கவாசகர் குருபூஜை விழா
திருப்பூர்
அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க பெருங்கருணை நாயகி உடனமர் அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மாணிக்கவாசகர் குருபூஜை விழா நடைபெறும். ஆனி மாத மகா நட்சத்திரத்தை முன்னிட்டு மாணிக்கவாசகர் சாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து தலைசிறந்த ஓதுவார் மூர்த்திகள் திருவாசக முற்றோதல் நடத்தினர். இதையடுத்து சாமி 4 ரதவீதிகளில் வலம் வந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
இதேபோல் அவினாசி வடக்கு ரதவீதியில் உள்ள கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீன கிளை மடத்தில் குருபூஜை மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Next Story