பஸ்சில் கடத்த முயன்ற 36 கிலோ குட்கா பறிமுதல்


பஸ்சில் கடத்த முயன்ற 36 கிலோ குட்கா பறிமுதல்
x

பெங்களூருவில் இருந்து ஓசூர் வழியாக பஸ்சில் கடத்த முயன்ற 36 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் சிப்காட் போலீசார் ஜூஜூவாடி சோதனைச்சாவடி அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த பஸ்சை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் 2 பேர் பைகளில் 36 கிலோ குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். அவர்கள் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை பகுதியை சேர்ந்த சையத் இப்ராகிம் (வயது39), முகமது மார்சுக் (48) என்பதும், பெங்களூருவில் இருந்து குட்காவை கடத்த முயன்றதும் தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.23 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.


Next Story