சரக்கு ஆட்டோவில் கடத்திய ரூ.5 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்


சரக்கு ஆட்டோவில் கடத்திய ரூ.5 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல்
x

பெங்களூரில் இருந்து சென்னைக்கு சரக்கு ஆட்டோவில் கடத்திய ரூ.5 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வேலூர்

பெங்களூரில் இருந்து சென்னைக்கு சரக்கு ஆட்டோவில் கடத்திய ரூ.5 லட்சம் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

குட்கா கடத்தல்

கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்கா, பான்மசாலா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தப்படுகின்றன. இதனை தடுக்க வேலூர் மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் அணைக்கட்டு ரோடு வழியாக குட்கா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார் வேலூர் அருகே உள்ள அரியூர் ரெண்டேரிகோடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பெங்களூரில் இருந்து வந்த சரக்கு ஆட்டோவை மடக்கி அதில் இருந்த நபரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அந்த நபர் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் ஆட்டோவை சோதனை செய்தனர். அப்போது அதில் 30 மூட்டைகளில் சுமார் 500 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தன.

வாலிபர் கைது

இதையடுத்து போலீசார் சரக்கு ஆட்டோவை குட்காவுடன் பறிமுதல் செய்து அரியூர் போலீசில் ஒப்படைத்தனர். அந்த நபரையும் போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அந்த நபர் பெங்களூரை சேர்ந்த அச்சுவர்த்தன் (வயது 23) என்பதும், பெங்களூரில் இருந்து சென்னைக்கு குட்காவை கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story