திருவண்ணாமலையில் குட்கா விற்ற கடைக்கு 'சீல்'
திருவண்ணாமலையில் குட்கா விற்ற கடைக்கு 'சீல்' வைக்கப்பட்டது.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையில் குட்கா மற்றும் கஞ்சா போன்ற போதை பொருட்களை ஒழிக்கும் நோக்கத்தில் நகரின் பல்வேறு இடங்களில் உணவு பொருள் பாதுகாப்பு துறை மற்றும் வருவாய்த்துறையுடன் போலீசார் இணைந்து நேற்று சோதனை நடத்தினர்.
திருவண்ணாமலை மத்திய பஸ் நிலையம் எதிரே உள்ள மளிகை கடையில் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து கடைக்கு 'சீல்' வைத்து, உரிமையாளரை கைது செய்தனர். மேலும் கடையில் இருந்து 590 கிராம் எடையுள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story